“400 உயிர்கள் காவு…. இந்தியா சும்மா இருக்காது” பாகிஸ்தான் அத்துமீறலுக்கு எதிராகக் கிளம்பிய உலகளாவிய எதிர்ப்பு….!! 

Estimated read time 0 min read

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 400 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த கொடூரமான நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதி மற்றும் கருணையைப் போற்றும் புனித ரம்ஜான் மாதத்தில், அப்பாவி மக்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது ஒரு கோழைத்தனமான மற்றும் மன்னிக்க முடியாத வன்முறை என்று இந்தியா சாடியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மண்ணில் புகுந்து பாகிஸ்தான் நடத்தியுள்ள இந்த அத்துமீறல் சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என்றும், இது பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தானின் இந்த ரத்தவெறித் தாக்குதல் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட்டு பாகிஸ்தானுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author