தொலைத் தொடர்பு துறை, சோதனை மற்றும் சான்றிதழ் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு சீனா எதிர்ப்பு

சோதனை மற்றும் சான்றிதழ், தொலைத் தொடர்பு துறை ஆகியவை தொடர்பான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்காவின் ஃபெடரல் தகவல் தொடர்பு ஆணையம் ஏப்ரல் 30ஆம் நாள் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே முதல் நாள் கூறுகையில், சீனா-அமெரிக்கா இடையே முயற்சியுடன் எட்டப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் நிலைத்தன்மையை இக்கட்டுப்பாடுகள் பாதிப்பதோடு, இருநாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கும் புறம்பானது என்றும், அமெரிக்காவின் இச்செயலை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தின் நடுநிலை கொள்கையை அமெரிக்க ஃபெடரல் தகவல் தொடர்பு ஆணையம் கைவிட்டு, உண்மையான ஆதாரம் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகளை வெளியிட்டு, சீனா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளை பாகுபாட்டுடன் கையாண்டு வருகிறது. இது சீனா மற்றும் அதன் இதர வர்த்தக கூட்டாளிகளின் நலன்களை கடுமையாக பாதித்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், தொழில்துறையின் கவனத்தை சரிவர நோக்கி, சந்தை விதிகளை மதித்து, தவறான செயலை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு சீனா அழைப்பு விடுப்பதாக அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author