தேர்தலுக்கு பிறகு பணவீக்கம் அதிகரிக்கும் என முன்பே எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று, சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்ந்து ரூ.3,237-க்கு சென்றுள்ளது.
சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் இதுவரை, விலை ₹1,380 உயர்ந்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் சுமார் 81% உயர்ந்துள்ளது. இதனால் டீ கடைகள், தாபாக்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் இனிப்பு கடைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!
தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை… https://t.co/ZAkRB1dnSK
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 1, 2026
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்! தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.இந்த #LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
