அமெரிக்க நிதி அமைச்சர் மற்றும் வர்த்தக பிரதிநிதியுடன் ஹெ லிஃபெங் தொடர்பு

சீனா-அமெரிக்கா வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீனத் தரப்பின் பொறுப்பாளரும், அரசவையின் துணை தலைமையமைச்சருமான ஹெ லிஃபெங், அமெரிக்கத் தரப்பின் பொறுப்பாளரும் நிதி அமைச்சருமான பெசன்ட், வர்த்தகப் பிரதிநிதி கிரீர் ஆகியோர், ஏப்ரல் 30 ஆம் நாள் இரவு காணொளியின் மூலம் தொடர்பு கொண்டனர்.

இருநாட்டு அரசுத் தலைவர்களின் புசான் சந்திப்பிலும், உரையாடல்களிலும் எட்டப்பட்ட முக்கிய ஒருமித்த கருத்துகளைச் செயல்படுத்துவது குறித்தும், பரஸ்பர அக்கறை கொண்ட வர்த்தக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும், இருதரப்பினரும் நேர்மையான, ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்களை மேற்கொண்டனர். சமீபத்தில் சீனா மீது அமெரிக்கா மேற்கொண்ட வர்த்தகக் கட்டுப்பாடுகள் குறித்து சீனா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. சீனா-அமெரிக்கா பொருளாதார கலந்தாய்வு இயங்குமுறையை தொடர்ந்து பயன்படுத்தவும், ஒருமித்த கருத்துகளை உருவாக்கி கருத்து வேறுபாடுகளை கட்டுப்படுத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சீனா-அமெரிக்கா வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளின் ஆரோக்கியமான, நிலையான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author