சீனாவின் அரசியல் தொடர்பான சொற்களில், நிர்வாக செயல்திறன் பற்றிய புரிதல், தனித்துவமான மற்றும் ஆழ்ந்த உள்ளடக்கம் கொண்ட கருத்தாக்கம். அதிகாரி ஒருவரின் பணி சாதனை பற்றிய மதிப்பீடு மட்டுமல்லாமல், யாருக்காக செயல்படுவது, யாரைச் சார்ந்திருப்பது ஆகியவை தொடர்பான ஒரு நாடு மற்றும் ஒரு கட்சியின் அடிப்படை தர்க்கத்தையும் இது வெளிப்படுத்துகிறது. மேலை நாடுகளின் தேர்தல் அரசியலானது குறுகிய காலப் பார்வையுடன் பல துண்டுகளாக பிளவுபட்டு சிக்கி தவிக்கும் நிலையில், அவற்றுடன் முற்றிலும் வேறுபட்ட நிர்வாக சிந்தனையை சீனா வழங்குகிறது. பதவிக்காலத்தைத் தாண்டி, அனைவரையும் சென்றடையும் நிர்வாகத்தை சீனா தெரிவு செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு ஹுனான் மாநிலத்தின் ஷிபாதொங் கிராமம், வறுமையால் பாதிக்கப்பட்ட கிராமமாக இருந்தது. அப்போது கிராமவாசிகளின் நபர்வாரி நிகர வருமானம் 1688 யுவான் மட்டுமே. ஆனால் அதே ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ச்சின்பிங் இக்கிராமத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, துல்லியமான வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தை முதன்முறையாக முன்வைத்தார். 10க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, அக்கிராமவாசிகளின் நபர்வாரி நிகர வருமானம் 10 மடங்கு அதிகரித்து, 20 ஆயிரம் யுவானைத் தாண்டியுள்ளது. ஷிபாதொங் கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், உள்ளூரில் ஒரு அதிகாரியின் பதவிக்காலத்தில் ஏற்பட்டவையாக அல்லாமல், பல அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் பெறப்பட்டவை.
சீனாவின் நிர்வாக கொள்கையின் தர்க்கம், பெரும்பாலானோருக்கு மனநிறைவு தருவது அல்லாமல், எவரும் விட்டுச் செல்லப்படவில்லை என்பதாகும். இத்தகைய நிர்வாக செயல்திறன் பற்றிய புரிதலின் மைய அம்சம், பொது மக்களுக்கு நன்மை பயப்பது குறிப்பிடத்தக்கது.
