“இந்தியா நினைத்தால் போர் உடனே நிற்கும்!”.. மோடிக்கு பின்லாந்து அதிபர் விடுத்த முக்கிய கோரிக்கை.. என்ன தெரியுமா? 

Estimated read time 1 min read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ‘ரைசினா டயலாக்’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், மேற்குலக நாடுகள் தலைமையிலான உலக ஒழுங்கு தற்போது பலவீனமடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வரும் இந்தியாவின் “நடுநிலைத் தன்மை” (Neutral Stance) மிகவும் முக்கியமானது என்று அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

“எங்களுக்கு இப்போது ஒரு போர் நிறுத்தம் தேவை; அதைச் செய்ய மோடியால் முடியும்” என்று கூறிய அவர், சர்வதேச அளவில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் கையை உலக நாடுகள் எதிர்நோக்கத் தொடங்கியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author