வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 99.93% வாக்குகளைப் பெற்று மீண்டும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, வடகொரிய அரசு ஊடகங்களே கிம் ஜாங் உன்னின் வேட்பாளர்களுக்கு எதிராக 0.07% வாக்குகள் (சுமார் 18,000 வாக்குகள்) பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எப்போதுமே 100% ஆதரவு என்று காட்டும் வடகொரியா, இம்முறை வேண்டுமென்றே இந்தச் சிறு எதிர்ப்பை வெளியிட்டிருப்பது, சர்வதேச சமூகத்திற்குத் தங்கள் நாட்டில் ‘ஜனநாயகம்’ இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கவே என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், ஒரு சர்வாதிகார நாட்டில் கிம் ஜாங் உன்னின் வேட்பாளர்களை எதிர்த்துப் பதிவான அந்த 18,000 வாக்குகள் யாருடையது? அவர்களுக்கு என்ன தண்டனை காத்திருக்கிறது? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
99.99% வாக்குப்பதிவு நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சிறு சதவீத எதிர்ப்பு என்பது கிம் ஜாங் உன் தனது மக்கள் மீதான பிடியைச் சோதிக்க நடத்திய ஒரு தந்திரமாகவும் பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ, “ஜனநாயகப் படுகொலை” என ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தாலும், கிம் ஜாங் உன்னின் ஆட்சி அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்வித தடையுமின்றித் தொடரப்போவது உறுதியாகியுள்ளது.
