அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் முதலாவதாக கூட்டணியை உறுதி செய்த அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்னும் வெளிப்படையாக தொடங்கவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடையே நிலவும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரைவில் தமிழகம் வர உள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீர் பயணமாக டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அதிமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளான சென்னை தி.நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், அவிநாசி, ஓசூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவும் பட்டியலிட்டு, அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் தொகுதிகளை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக – அமமுக இரண்டும் சம பலத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளை கேட்டுவரும் நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவுசெய்ய முடியாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அதிமுக – பாஜக – அமமுக இடையே சுமூக முடிவை எடுப்பது தொடர்பாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் [மேலும்…]
கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள விசிக முக்கியப் பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நாளை கடலூர் வருகை [மேலும்…]
மதுரை : ஆன்மீகப் பெருமையும் வரலாற்றுப் பாரம்பரியமும் மிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், ஒட்டுமொத்தத் தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த மகா குடமுழுக்கு [மேலும்…]
இந்தியத் துணைக்கண்டத்தில் செயல்படும் அல்-கொய்தா (AQIS) தீவிரவாத அமைப்பின் வலையமைப்பில் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கில், கோவையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மக்சூத் அலியை [மேலும்…]
சில குரல்கள் அவ்வப்போது கேட்கப்படும். சில குரல்கள் நினைவில் நிலைத்திருக்கும். ஆனால், ஒரு நாட்டின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வெகு சிலவே. அத்தகைய [மேலும்…]
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற [மேலும்…]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை [மேலும்…]