டெல்லி ஜந்தர் மந்தரில் 21 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை மோசமடைந்ததால் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தற்போது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து ஆதரவாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இன்று (ஜூலை 20, திங்கள்) நாடாளுமன்றத்தை நோக்கி திட்டமிடப்பட்டிருந்த பேரணி நடைபெறவுள்ள நிலையில், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க 3 முக்கிய நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.
அவை நிறைவேற்றப்பட்டால், இன்றே உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அவர் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட உருக்கமான கடிதம்: உண்ணாவிரதத்தை முடிக்க 3 அதிரடி நிபந்தனைகள்
