திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி; தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவு  

Estimated read time 1 min read

தமிழ்நாடு திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையினைப் பரிசீலித்து, திரையரங்கு விதிகளில் மிக முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு தமிழக முதலமைச்சர் விஜய் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இனி குறிப்பிட்ட நாட்களில் தினசரி 5 காட்சிகள் (5 Shows) திரையிட அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவின்படி, புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஒரு வாரத்திற்கு திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் வரை திரையிடலாம்.
வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு), அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் உள்ளூர் பண்டிகை/விடுமுறை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு முறையும் தனியாக எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை என விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author