அறிவியல் பூர்வமான முறையில் மனித உரிமை சவால்களைக் கையாள்வது தொடர்பான கூட்டம்

ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 61ஆவது கூட்டத்தொடரின்போது, வளர்ச்சிக்கான உரிமை பற்றிய அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதம், அறிவியல் பூர்வமான திட்டத்தின் மூலம் மனித உரிமை சவால்களைக் கையாள்வது என்ற தலைப்பிலான கூட்டத்தை, சர்வதேச பரிமாற்றங்களுக்கான சீன அரசு சாரா அமைப்பு சங்கம், ஜெனிவாவிலுள்ள சீன நிரந்தர பிரதிநிதிக் குழுவுடன் இணைந்து நடத்தியது.

சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பிரமுகர்கள் இக்கூட்டத்தில் ஒன்றுகூடி, வளர்ச்சிக்கான உரிமையை உத்தரவாதம் செய்ய அரசு சாரா அமைப்புகள் எவ்வாறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றியும், காலநிலை மாற்றம், பொது சுகாதார நெருக்கடி, டிஜிட்டல் இடைவெளி உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சமாளிப்பது, பாகுபாடு மற்றும் சமமின்மை போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க ஊக்குவிப்பது ஆகிய துறைகளில் எவ்வாறு பங்கு அளிப்பது குறித்தும், விவாதம் நடத்தினர்.

பலதரப்பு கட்டமைப்புக்குள் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கம் பற்றிய பேச்சுவார்த்தையை மேம்படுத்துவதில் சீனா ஆற்றிய ஆக்கப்பூர்வமான பங்களிப்பை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பாராட்டினர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author