ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 61வது அமர்வில் அண்மையில் பல்வேறு நாடுகளில் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து பொது விவாதம் நடைபெற்றது.
அமர்வுக்கான சீன பிரதிநிதி குழுவின் துணை தலைவர் லி சியாவ்மேய் கூறுகையில், தற்போது பலதரப்புவாதம் மற்றும் உலகளாவிய மனித உரிமை விவகாரம் முன்பு காணாத சவால்களை எதிர்கொள்வதோடு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பில் பிரதேச நிலைமை ஆழமான தாக்கம் செய்து, மனித நேய பேரழிவை ஏற்படுத்துகிறது என்றார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, அனைத்து தரப்புகளும் மனித உரிமையை மேம்படுத்தி பாதுகாக்கும் ஆரம்ப நோக்கத்தை மீண்டும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும், சமத்துவம், பரஸ்பர மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொண்டு, மனித உரிமை துறையின் முன்னேற்றத்துக்கு உண்மையாக பணியாற்ற வேண்டும் என்றும் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
