உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 6ஆம் நாள் போக்குவரத்தின் எதிர்காலம் என்ற அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, உலகப் போக்குவரத்து துறையின் புத்தாக்கம் மேலும் பசுமையான எதிர்கால தொழில்நுட்பத்துக்கு மேலதிக கவனம் செலுத்தி வருகிறது.
உதாரணமாக, ஏர் டாக்சி, மின்சார வாகனத்துக்கான கம்பியில்லாத மின்னூட்டு தொழில்நுட்பம், தன்னியக்க சரக்கு கப்பல் முதலியவை அடங்கும். எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பத்துக்கான புத்தாக்கத் துறையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உலக முன்னணயில் வகித்துள்ளன.
2000ஆம் ஆண்டு முதல் இத்துறையில் இந்த 5 நாடுகள் மொத்தமாக 10லட்சத்து 50ஆயிரம் கண்டுபிடிப்புக்கான காப்புரிமைகளைப் பெற்றுள்ளன.
மேலும், கடந்த சில ஆண்டுகளில், உலக மின்சார வாகனச் சந்தையில் சீனா தலைமை பங்கு ஆற்றி வருவதுடன், இத்துறையில் அதன் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகளின் எண்ணிக்கையும் பெரிதும் அதிகரித்துள்ளது.