17ஆவது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டத்தில் லீ சியாங் பங்கேற்பு

சீனத் தலைமை அமைச்சர் லீ சியாங் ஜூன் 23, 24 ஆகிய நாட்களில் டாலியன் நகரில் நடைபெறும் 17ஆவது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

அப்போது துவக்க விழாவில் கலந்து கொள்ளும் லீ சியாங் சிறப்புரை வழங்க உள்ளார். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு விருந்தினர்களை அவர் சந்திக்கவும், தொழில் மற்றும் வணிகத் துறை பிரதிநிதிகளுடன் உரையாடி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வங்கதேசம், கினியா, கஜகஸ்தான், தென் கொரியா, மங்கோலியா, மொண்டெனேக்ரோ ஆகிய நாடுகளின் தலைமை அமைச்சர்களும், 90க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து அரசியல், வணிகம், கல்வி, ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 1700க்கும் அதிகமான பிரதநிதிகளும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author