மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் அதிரடி உத்தரவு

Estimated read time 1 min read

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எல்என்ஜி எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கத்தாரின் ராஸ் லஃப்பான் மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனைச் சமாளிக்க, இந்திய அரசு 1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, அரசு மற்றும் தனியார் எரிவாயு நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு மற்றும் விநியோகம் குறித்த முழுமையான தரவுகளை பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவிடம் கட்டாயமாக வழங்க வேண்டும். வணிக ரகசியம் என்ற காரணத்தைக் கூறி எந்த நிறுவனமும் இனி தகவல்களைத் தர மறுக்க முடியாது.

இந்த அதிரடி உத்தரவின் மூலம் ஓஎன்ஜிசி ,கெய்ல் போன்ற அரசு நிறுவனங்கள் முதல் ரிலையன்ஸ், அதானி கேஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் வரை அனைத்தும் அரசின் கண்காணிப்பிற்குள் வந்துள்ளன. நாட்டில் எவ்வளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது, எங்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தத் தரவுகள் அரசுக்கு உதவும்.

ஒருவேளை வரும் வாரங்களில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்தால், நிலைமையைக் கையாள்வதற்கும், சரியான இடங்களுக்கு விநியோகத்தை முறைப்படுத்துவதற்கும் இந்தத் தகவல்கள் மிகவும் அவசியமானவை. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author