தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி அதிரடி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஜனநாயக முறைப்படி அதிக இடங்களை வென்ற கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆளுநரின் போக்கைக் கண்டித்தும் நாளை காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் திடீர் போராட்ட அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
