தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏற்கனவே ஆளுநரைச் சந்தித்த நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுவதால், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் திடீர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதா? அல்லது அதிமுக தரப்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரப்படுமா? என்பது குறித்த பல்வேறு யூகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
