சீன வெளியுறவு அமைச்சர்-தாய்லாந்து தலைமை அமைச்சர் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 24ஆம் நாள் பென்கோகில், தாய்லாந்து தலைமை அமைச்சர் அனுதினைச் சந்தித்துரையாடினார்.

அப்போது வாங் யீ கூறுகையில்,

தாய்லாந்தின் நம்பத்தக்க உறுதி மிக்க நெடுநோக்கு கூட்டாளியாக சீனா எப்போதுமே திகழ்கின்றது. சிக்கலான சர்வதேச நிலைமையைச் சந்திக்கும் நிலைமையில், தாய்லாந்துடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, நெடுநோக்கு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, புதிய எரியாற்றல், அடிப்படை வசதி கட்டுமானம், வேளாண்மை ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, மேலும் நிதானமான செழுமையான தொடரவல்ல சீன-தாய்லாந்து பொது சமூகத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புகின்றது. தாய்லாந்து, இணையவழி சூதாட்டம் மற்றும் நிதி மோசடி குற்றங்களை நீக்கி, சீன-தாய்லாந்து உறவுக்கு சீரான சூழலை உருவாக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author