பங்களாதேஷ் தேர்தல் வெற்றி: தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  

Estimated read time 1 min read

பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி (BNP) கட்சியைத் தீர்க்கமான வெற்றிக்கு இட்டுச் சென்ற திரு. தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author