816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

Estimated read time 1 min read

lநாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகின்ற மக்களவைத் தேர்தலிலிருந்து பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கான மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால், மக்களவையில் தற்போதுள்ள 543 என்கிற எண்ணிக்கை, ஐம்பது சதவீதம் உயர்ந்து 816ஆக அதிகரிக்கும்.

இதில் கூடுதலாக ஒதுக்கப்படும் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுவதால், ஆண் உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது.

தற்போது கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம், அதிக உறுப்பினர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், 816 உறுப்பினர்கள் அமர்வதில் தொழில்நுட்ப ரீதியாகவும் பிரச்னை இருக்காது.

இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் நாடாளுமன்ற பலம் அதிகரிக்கும்.

அதேவேளையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருக்க சிறப்பு ஃபார்முலா ஒன்றை மத்திய அரசு உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author