பாகிஸ்தானில் இருந்து குண்டுகள் வீசினால், இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாயும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்தத்தை இந்தியா அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அறிவிக்கிறார் என்றால் இந்திய நாட்டின் இறையாண்மையை மோடி அரசு அமெரிக்காவிடம் அடமானம் வைத்து விட்டது என்று பொருள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய யாரும் தேவையில்லை, நாங்களும் எதிர்பார்க்கவில்லை எல்லையில் பாகிஸ்தானில் இருந்து குண்டுகள் வீசினால், இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாயும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து, ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் விமானப்படை தளங்களை தாக்கியதே முக்கிய திருப்புமுனை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் எனக் கூறியிருந்தார்.