மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
புனே மாவட்டம் நவாலி பாலத்தில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதவே, அந்தக் கார் முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் கார் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
