சீனாவில் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து, தன்னுடன் இருந்த மற்ற 7 நாய்களையும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்த ‘கோர்கி’ வகை நாய்க்குட்டி ஒன்று தற்போது இணையதளங்களில் ஹீரோவாகக் கொண்டாடப்படுகிறது.
கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியிருந்த இந்த நாய்கள், அங்கிருந்து தந்திரமாகத் தப்பித்து சுமார் 17 கிலோமீட்டர் தூரம் காடுகளையும் மேடுகளையும் கடந்து பயணம் செய்துள்ளன.
இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கிய கோர்கி நாய், வழிதவறிப் போகாமல் மற்ற நாய்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த நாயின் புத்திசாலித்தனத்தையும் தைரியத்தையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
In China, Seven dogs stolen from their owners have gone viral after escaping from an illegal transport truck and making their way home. They traveled 10.5 miles/17 km together, led by a corgi across highways and fields, now safely back with their respective owners. pic.twitter.com/aV6H7GWlh2
— Nature is Amazing
(@AMAZlNGNATURE) March 23, 2026
“>
மேலும் நீண்ட தூரப் பயணத்தால் நாய்கள் சோர்வடைந்திருந்தாலும், அவற்றின் உரிமையாளர்களை மீண்டும் சந்தித்த போது காட்டிய மகிழ்ச்சி காண்போரை நெகிழச் செய்தது. ஒரு சிறிய நாய் இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து மற்ற உயிர்களைக் காப்பாற்றியது, விலங்குகளின் விசுவாசத்திற்கும் அறிவிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

