ஜப்பானின் 731ஆவது ராணுவப் படையை சுவெட் யூனியன் விசாரணை செய்தது குறித்து ரஷியா சீனாவுக்கு ஒப்படைத்த பதிவேடுகளை சீன மத்திய ஆவணக்காப்பகம் டிசம்பர் 13ஆம் நாள் வெளியிட்டது. ஜப்பானின் 731ஆவது ராணுவப் படையைச் சேர்ந்தவர்களின் மீதான விசாரணை பதிவு, ஜப்பானின் 731ஆவது ராணுவப் படையின் குற்றங்கள் பற்றிய ஆய்வு அறிக்கை, சுவெட் யூனியன் உட்புற செய்திகள் ஆகியவை, இந்த பதிவேடுகளில் அடங்குகின்றன.
இந்த பதிவேடுகளின் முக்கிய அம்சம், போலி என்ற விசாரணையில் 200க்கும் மேற்பட்டோர் ஜப்பானின் 731ஆவது ராணுவப் படையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. முக்கிய போர் குற்றவாளி மற்றும் சாட்சியாளர்களை விசாரணை செய்த பிறகு, 12 போர் குற்றவாளிகள் வெளிப்படையாக விசாரணை செய்யப்பட்டனர். அவர்கள் சர்வதேச உடன்படிக்கையை மீறி, கிருமி போரை ஆயத்தம் செய்து மேற்கொண்ட குற்றங்களை ஏற்றுக்கொண்டனர். இவை எல்லாம், இந்த பதிவேடுகளில் முதல் முறையாக வெளியிடப்பட்டன.
