அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது உலக நாடுகளைப் பொருளாதார ரீதியாகப் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பனான தென் கொரியா, இந்த போர்ச் சூழலால் கடும் எரிசக்தி தட்டுப்பாட்டைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளது.
தென் கொரியாவிற்குத் தேவையான 70 சதவீத கச்சா எண்ணெய் ஈரான் கடல் வழியாகத்தான் வரவேண்டும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது நாட்டு மக்களுக்கு தென் கொரிய அரசு அதிரடியாக 12 கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது.
அதில், மின்சாரத்தைச் சேமிக்க மக்கள் குறைவாகக் குளிக்க வேண்டும் என்றும், மொபைல் போன்களை இரவில் சார்ஜ் செய்யாமல் பகலிலேயே சார்ஜ் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர, தேவையில்லாமல் கார்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், வாஷிங் மெஷின் போன்ற மின்சாதனங்களை வார இறுதி நாட்களில் மட்டும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த விதிகள் கட்டாயமில்லை என்றாலும், நிலைமை சீராகாவிட்டால் கடும் சட்டங்கள் வரும் என அந்த நாட்டு எரிசக்தி அமைச்சர் எச்சரித்துள்ளது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
