ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா மற்றும் சீனா இடையிலான வலுவான உறவைப் பாராட்டினார்.
சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ரஷ்யப் பயணம் ஒரு பெரும் வெற்றி என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, மூலோபாய ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியதாகவும் புடின் கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் குழுவை வலுப்படுத்த இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் கூட்டு முயற்சிகளையும் புடின் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இரு நாடுகளின் கூட்டாண்மைக்கு ஆழ்ந்த குறியீட்டு முக்கியத்துவம் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் குழுவை வலுப்படுத்த முயற்சி; ஜி ஜின்பிங்கை பாராட்டினார் விளாடிமிர் புடின்
