2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நாம் இந்தியர் கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் என் பி ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாம் இந்தியர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருகிறது .2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தனித்து அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
தூத்துக்குடி சென்னை உள்ளிட்ட 120 தொகுதிகளில் நாம் இந்தியர் கட்சி போட்டியிடும். விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக எதிர்க்கட்சிகள் போராடுவதில்லை .
ஆளும் கட்சி எதிர்க்க வேண்டும் என்றால் மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் வலுவான கூட்டணியாக இருக்கும். அவ்வகையில் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது .மத்திய அரசின் மும்மொழி கொள்கையில் கூடுதல் மொழிகளை கற்றுக் கொண்டால் நன்மைதான்.
அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் .ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில கட்சிகளை அழிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகும் என்று அவர் தெரிவித்தார் .உடன் மாநில செயலாளர் பொன்ராஜ், மாநில பொருளாளர் ஜெயகணேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.