சீனாவில் உடன்பிறப்புகளைத் தேடி வந்த நௌரு அரசுத் தலைவர் அடியங் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார்.
தனது மூதாதையர்கள் சீனாவிலிருந்து ஓஷினியாவுக்குச் சென்ற பயணம் பற்றி அறிந்து கொண்ட அவர் கூறுகையில், எனக்கு உதவி அளித்த சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அவருடன் மீண்டும் சந்திப்பு நடத்தி, இரு தரப்புறவைக் கூட்டாக முன்னேற்ற விரும்புகிறேன். சீனாவுடனான என் உடன்பிறப்பு தொடர்பு, இரு நாட்டுறவின் வலுவான பாலமாக அமைகிறது. நௌருவும் சீனாவும் நெருங்கி வருகின்றன.
சீனாவின் வளர்ச்சி அனுபவத்தை, நௌரு மட்டுமல்ல உலகம் முழுவதும் கற்றுக்கொள்ளத் தக்கது. சீன மக்கள் கடைப்பிடித்த சிந்தனை, சமூகத்துக்கு சுயநலமற்ற அர்ப்பணிப்பையும் முழு சமூகத்தின் பாய்ச்சல் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
சிறப்பு பாலத்தை அமைத்து, இரு நாட்டு அரசாங்கங்கள் மற்றும் மக்களின் தொடர்பை நெருக்கமாக்கி, இன்பத்துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் எதிர்காலத்தை உருவாக்குவது, எங்கள் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.