சீனா தயாரித்த “மெங்சியாங்” என்னும் பெருங்கடல் துளையிடும் கப்பல் நவம்பர் 17ஆம் நாள் கப்பல் படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
ஆழ்கடல் பகுதியில் சீனாவின் ஆய்வுத் தொழில் நுட்பம் பெரும் முக்கிய சாதனையைப் பெற்றுள்ளதை இது காட்டியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கடல் சார் தொழில் நுட்ப புத்தாக்கத்தை வலுப்படுத்தி, சர்வதேச கடல் சார் ஒத்துழைப்பை விரிவுப்படுத்தி, சீன நவீனமயமாக்கத்தையும், மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தையும் முன்னேற்றுவதற்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.