விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், அவற்றை பாதுகாப்பதற்கான புதிய உத்தியை இந்தியா உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் ஒரு செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோளுடன் நெருங்கி வந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த திட்டத்தை தீவிரப்படுத்த அரசு தயாராகி வருகிறது.
இந்த திட்டத்தின்படி, விண்வெளியில் உள்ள மற்ற விண்கலங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் பாடி கார்ட் செயற்கைக்கோள்களை உருவாக்க இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் மத்தியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு அண்டை நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள், இந்தியாவின் இஸ்ரோ செயற்கைக்கோளுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவாக நெருக்கமாக வந்தது.
இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்க பாடி கார்ட் செயற்கைக்கோள்களை உருவாக்க திட்டம்
