சீன உள்மங்கோலியாவுக்கு வருகை புரிந்த அமெரிக்க நண்பர் ரோனால்ட் சாகோல்ஸ்கி, சீனாவின் பாலைவனமாதல் தடுப்பு வீரரான யின் யுசென் அம்மையாரை 20க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்ததைப் பதிவு செய்த வீடியோ அண்மையில் வைரலானது.
1999ஆம் ஆண்டு சீனாவில் ஆசிரியராகப் பணி புரிந்த அமெரிக்கர் சாகோல்ஸ்கி, 5000 டாலரைத் திரட்டி பாலைவனமாதல் தடுப்பு மற்றும் காடு வளர்ப்பில் ஈடுபட்ட யின் யுசென்னுக்கு உதவியளித்தார். இன்று, இந்த 5000 டாலரில் வாங்கிய மரக் கன்றுகள் 50ஆயிரத்துக்கும் மேலான பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. இவ்வாண்டின் மே மாதத்தில், யின்யுசென் இணையத்தில் காணொளி மூலம் தனக்கு உதவியளித்த அந்த அமெரிக்க நண்பரைத் தேடி முயற்சி செய்தார். பசிபிக் பெருங்கடல் கடந்த இந்த நட்புறவு சீனா-அமெரிக்கா இடையே அரசு சாரா நட்புறவின் உயிர்த்துடிப்புடன் கூடிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. நாடுகளுடனான உறவு என்பது மக்களுக்கு இடையே உள்ள தொடர்புகளாகும். சீன-அமெரிக்க தொடர்பின் வரலாற்றில் இத்தகைய மனத்தை உருக்கும் கதைகள் நிறைய உள்ளன. இரு நாட்டு மக்களுக்கிடையே உள்ள நட்பு சீன-அமெரிக்க உறவை காற்று மற்றும் மழையைக் கடந்து செல்வதை முன்னேற்றியுள்ளது.
