டொனல்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் நாள் 2-ஆவது முறையாக அரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
மூன்று நாட்களுக்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, சீன-அமெரிக்க உறவின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து இருவரும் ஒத்த கருத்துக்களை எட்டினர்.
புதிய துவக்கப் புள்ளியில் சீன-அமெரிக்க உறவு மேலதிக முன்னேற்றங்களைப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த இரு தலைவர்கள் அமெரிக்காவும் சீனாவும் தற்போது உலகில் மிக முக்கிய நாடுகளாகும். நீண்டகால நட்பு உறவை நிலைநிறுத்தி, உலக அமைதியைக் கூட்டாகப் பேணிகாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இது உலக நாடுகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளாக, இரு நாட்டு வர்த்தகத் தொகை 66 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. சீனாவிற்கு ஏற்றுமதி மட்டும் அமெரிக்காவுக்கு 9 இலட்சத்து 30 ஆயிரம் வேலை பணித்தலங்களை வழங்கியுள்ளது. இதைத் தவிர, எரிசக்தி, அறிவியல் தொழில்நுட்பம், போதைப்பொருள் தடை, சட்ட அமலாக்கம், காலநிலை மாற்றம், மனிதநேய பரிமாற்றங்கள் முதலிய துறைகளில் சீனாவும் அமெரிக்காவும் பரந்த கூட்டு நலன்களையும் ஒத்துழைப்பு தேவைகளையும் கொண்டுள்ளன.
இரு நாடுகள் வித்தியாசமான தேசிய நிலைமைகளைக் கொண்டுள்ளன, சில கருத்து வேற்றுமைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். 2024ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில் சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது, தைவான் பிரச்சினை, மனித உரிமை, அரசியல் அமைப்புமுறை, வளர்ச்சிக்கான உரிமை ஆகிய 4 எச்சரிக்கைக் கோடுகளைச் சீனா தெளிவாக காட்டியுள்ளது. அதோடு பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் சீனாவும் அமெரிக்காவும் மோதல் மற்றும் எதிரெதிர் நிலையைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 46 ஆண்டுகளில் சர்வதேச நிலைமை மற்றும் இரு நாட்டு உறவு மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அடிப்படை உண்மை மாறாமல் உள்ளது. அதாவது, சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு தரப்புக்கும் நன்மையளிக்கும்.