முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அரை நூற்றாண்டு காலம் அரசியலில் கோலோச்சியவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் 102 பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் பிறந்த வீட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில் கலைஞரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து… pic.twitter.com/H74mvH1PDD
— M.K.Stalin (@mkstalin) June 3, 2025