மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மார்ச் மாதம் 31-ஆம் தேதி மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அன்றைய தினம் அரசின் உத்தரவை மீறி யாராவது மதுக்கடைகளைத் திறந்து வைத்தாலோ அல்லது மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை தினத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
