இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 5, 2025 வரை பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை விலகி, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான இடைப்பட்ட காலத்தில் நிலவும் வானிலைக் காரணமாக இந்த மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் ஒரு சில கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
