ஓரளவு தளர்ச்சியான நாணயக் கொள்கை சிறப்பான பயனைப் பெற்றுள்ளது:சீன மக்கள் வங்கி

ஓரளவு தளர்ச்சியான நாணயக் கொள்கை சிறந்த பயனைத் தொடர்ச்சியாகப் பெறுகிறது. மார்ச் திங்கள் இறுதியில், சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம், பசுமை, உள்ளடக்கியம், முதுமைக் காலத் துறை, எண்ணியல் பொருளாதாரத் துறை ஆகிய கடன்கள் 10 விழுக்காடு மேல் அதிகரித்துள்ளது என்று சீன மக்கள் வங்கி 11ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.

சீன மக்கள் வங்கி வெளியிட்ட 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் சீன நாணயக் கொள்கை செயல் அறிக்கையின்படி, இவ்வாண்டின் துவக்கம் முதல், சமூக நிதி திரட்டல் நிபந்தனை தளர்ச்சியான நிலையில் உள்ளது. மொத்தம் நாணய மதிப்பு உரிய முறையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல், சீன மக்கள் வங்கி கட்டமைப்பு நாணயக் கொள்கைக் கருவியை மேம்படுத்தி, ஆதரவை வலுப்படுத்துவதன் மூலம், நம்பிக்கை கடன் கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப ரீதியான சிறிய மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களின் கடன் நிலுவை கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 20.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அடுத்த காலக்கட்டத்தில் சீன மக்கள் வங்கி, உள்நாட்டுத் தேவை, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம், சிறய மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் முதலிய முக்கிய துறைகளுக்கான நாணய ஆதரவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author