சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 47 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து, ரூ. 5 ஆயிரத்து 870-க்கு விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.21 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 404-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 1 ரூபாய் குறைந்து, ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.