சிங்கப்பூர் தலைமை அமைச்சர் மற்றும் இலங்கை நாடாளுமன்றத் தலைவருடன் சாவ் லெஜி சந்திப்பு

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ் லெஜி, மார்ச் 27ம் நாள், போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லோரன்ஸ் வாங், இலங்கை நாடாளுமன்றத்தின் தலைவர் விக்கிரமரத்தின ஆகியோரை முறையே சந்தித்துரையாடினார்.

லோரன்ஸ் வாங்கைச் சந்தித்த போது சாவ் லெஜி கூறுகையில், சிங்கப்பூருடன் இணைந்து, சீன-சிங்கப்பூர் உறவுக்கான அரசியல் அடிப்படையைத் தொடர்ந்து வலுப்படுத்தி, பல்வேறு துறைகளின் உயர்நிலை ஒத்துழைப்பை மேலும் முன்னெடுக்க சீனா விரும்புகின்றது என்றார்.

விக்கிரமரத்தினவைச் சந்தித்த போது அவர் கூறுகையில், சீன-இலங்கை தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்களைச் செயல்படுத்தி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை, எண்ணியல் இலங்கை என்ற திட்டத்துடன் ஒன்றிணைத்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் தொடர்புடைய ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தங்களின் நாடுகள் ஒரே சீனா கொள்கையை உறுதியாகப் பின்பற்றி வருவதாக லோரன்சும் விக்கிரமரத்தினவும் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author