மத்திய ஆசியாவின் 5 நாடுகளுடன் சுமூகமாக உறவைத் தூண்ட சீனா பாடுபடும்: வாங்யீ

2025ஆம் ஆண்டின் ஜூன் 16ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கசகஸ்தானுக்குச் சென்று 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். இப்பயணத்தின் நிறைவின் போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ செய்தியாளர்களிடம் தொடர்புடையத் தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், இவ்வாண்டின் கோடைக்காலத்தின் போது, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங், அஸ்தானாவில் 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு, மத்திய ஆசியாவைச் சேர்ந்த 5 நாடுகளின் அரசு தலைவர்களுடன் முறையே சந்தித்து பேசினார். இப்பயணம், இவ்வாண்டில் மத்திய ஆசிய பிரதேசத்தில் நடைபெற்ற மிக முக்கியமான வெளிவிவகார நடவடிக்கையாகும். இப்பயணம் பயனுள்ளதாகவும் சீராகவும் நடைபெற்று.

ஆழ்ந்த செல்வாக்குகளை ஏற்படுத்தும். மேலும், அஸ்தானாவைச்  சென்றடைந்த 48 மணி நேரத்திற்குள், பத்துக்கும் மேலான இரு தரப்பு நடவடிக்கைகளில் ஷிச்சின்பிங் பங்கெடுத்தார். இந்த 5 நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் பாரம்பரிய நட்புறவை நினைவு கூர்ந்து,  ஒத்துழைப்புகள் தொடர்பாக ஆலோசனை செய்து, கூட்டு வளர்ச்சி இலக்குகளை விவாதித்து, நூற்றுக்கும் மேலான ஒத்துழைப்பு உடன்படிக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

 

 

You May Also Like

More From Author