5 பைசாவிற்காக 40 ஆண்டுகள் தொடர்ந்த சட்டப் போராட்டம்.. இந்தியாவையே உலுக்கிய வழக்கு..!! 

Estimated read time 1 min read

1973-ஆம் ஆண்டு டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ரன்பீர் சிங் யாதவ், ஒரு பெண் பயணியிடம் 5 பைசா கூடுதலாகப் பெற்றுக்கொண்டார் என்ற சிறிய குற்றச்சாட்டின் கீழ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வெறும் 5 பைசாவுக்காகத் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

இந்த நீண்ட காலத்தில், 5 பைசா நாணயமே இந்தியாவில் செல்லாததாகிப்போனது. ஆனால், திருடன் என்ற முத்திரையைத் துடைக்கவும், தனது கௌரவத்தை நிலைநாட்டவும் ரன்பீர் சிங் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை நீதிமன்ற படிக்கட்டுகளிலேயே கழித்தார்.

இறுதியாக 2016-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களாக சுமார் 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் அவர் வெற்றி பெற்றாலும், ஒரு மனிதனின் முழு வாழ்க்கையும், இளமையும் இந்த 5 பைசா வழக்கில் சிதைந்து போனது ஒரு மிகப்பெரிய சோகமாகும்.

“>

நீதிக்கான நீண்ட காத்திருப்பு மற்றும் அதிகார வர்க்கத்தின் பிடிவாதத்தால் ஒரு சாமானிய மனிதன் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறான் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாகத் திகழ்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author