எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி

எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளை சாடிய அவர்,

60 ஆண்டுகளில் அவர்கள் பெரிய அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்கியுள்ளதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு சரியான உணவு கூட கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதாகவும், ஆனால் பொதுக்களின் குழந்தைகள் படிக்க சரியான பள்ளிகள் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர்களின் ஆட்சி காலத்தில் இந்தியா எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

21ம் நூற்றாண்டில் இண்டியா கூட்டணியின் பாவங்களுடன் பாரதம் முன்னேற முடியாது என்றும், 5வது கட்ட தேர்தலில் இண்டியா கூட்டணி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author