சீன-அமெரிக்க உறவு பற்றிய கருத்துக் கணிப்பு

அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் மே 13 முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன ஊடகத்தின் சி.ஜி.டி.என், சீன ரென்மின் பல்கலைக்கழகத்துடன், சீன-அமெரிக்க உறவு பற்றி கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் உலகளவில் 39 நாடுகளைச் சேர்ந்த 12302 பேர் கலந்து கொண்டனர்.

சீரான மற்றும் நிதானமான சீன-அமெரிக்க உறவு, சர்வதேச சமூகத்துக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இக்கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 75 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இக்கருத்தை 76.7 விழுக்காடான அமெரிக்கர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும், சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதை நனவாக்க முடியும். இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக சர்ச்சை தீர்க்கப்பட முடியும் என்று 67.9 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author