கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ சி செப்டம்பர் 16ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை கியூபாவில் அரசு முறை நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார்.
கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முதல் செயலாளரும் அரசுத் தலைவருமான டயஸ்-கார்னலைச் சந்தித்த போது லீ சி கூறுகையில், கியூபாவுடன் இணைந்து இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் தலைவர்கள் எட்டிய முக்கிய ஒத்த கருத்துக்களைச் செயல்படுத்தி, ஆட்சிமுறை துறையில் அனுபவங்கள் மற்றும் பரிமாற்றங்களையும் பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பையும் ஆழமாக மேற்கொள்ளச் சீனா விரும்புகின்றது என்றார்.உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இணைந்து உறுதியாக நின்று வருகின்றது.
இது, வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பெரிதும் பேணிகாப்பதாக டயஸ்-கார்னல் தெரிவித்தார். ஒரே தரப்பான பொருளாதாரத் தடை மற்றும் முற்றுகையை எதிர்பத்தில் கியூப மக்களுக்குச் சீனா உறுதியாக ஆதரிப்பதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.