மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!

Estimated read time 0 min read

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் சேவை தொடங்கியது.

வருகிற ஜூலை 5ம் தேதி வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, காலை 9.10க்கு புறப்பட்டுச் சென்றது.

இதில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். அதேபோல், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு, வரும் 28ம் தேதி முதல், வருகிற ஜூலை 6ம் தேதி வரை, சனி மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது.

You May Also Like

More From Author