மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஓமன், ஈரான் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ தொலைபேசி உரை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 2ஆம் நாள் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார்.

அப்போது பத்ர் கூறுகையில், ஓமனின் இணக்க முயற்சியில், ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்பு கண்டிராத முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் பேச்சுவார்த்தையில் பெறப்பட்டுள்ள சாதனைகளைக் கைவிட்டு போர் தொடுத்தன. வருத்தமளித்துள்ளது என்றார்.

அமைதியை முன்னேற்றும் பணிகளை ஓமன் தொடர்ந்து மேற்கொண்டு அமைதியின் நனவாக்கம் மற்றும் போரை நிறுத்துவதற்கு சீனா பாடுபடுமென ஆதரவளிக்கும் என்று வாங்யீ கூறினார்.

அதே நாள் அழைப்பையேற்று, வாங்யீ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பிரதேசத்தின் புதிய நிலைமையை அரக்சி அறிமுகப்படுத்தினார். நிலைமையை மேலும் தீவிரமாகி போர் முழு மத்திய கிழக்குப் பிரதேசத்துக்குப் பரவுவதைத் தடுக்க, அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக வாங்யீ தெரிவித்தார்.   

மேலும், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பரோட் உடனும் தொலைபேசியில் பேசிய வாங்யீ, மத்திய கிழக்கு நிலைமை குறித்து கருத்துக்களைப் பரிமாறி கொண்டார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author