தமிழ் ஹைக்கூ கவிதைகள்.

Estimated read time 0 min read

துளிப்பா ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

தொடங்கியது பட்டிமன்றம்
வேண்டுமா ? வேண்டாமா ?
தலைக்கவசம் !

மகிழ்ச்சியில் காவலர்கள்
கட்டாயமானதில்
தலைக்கவசம் !

ஆனந்தக் கூத்தாடினர்
உற்பத்தியாளர்கள்
தலைக்கவசம் !

இறக்காமல் வாழ்ந்திருப்பார்கள்
பயணத்தில் அணிந்திருந்தால்
தலைக்கவசம் !

குரங்கின் சேட்டை
வாலால் என்றால்
குழந்தையின் சேட்டை ?

உணர்ந்தனர் மக்கள்
உடற்பயிற்சியின் இராசா
நடைபயிற்சி !

இயற்கையின் விந்தை
பறவையின் எச்சம்
பெரிய விருட்சம் !

Please follow and like us:

You May Also Like

More From Author