2025 சீன தேசிய கண்டுபிடிப்பு குறியீட்டு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் படி, உலகக் கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் சீனா 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட 11 இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டோர் பலர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சீனாவின் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில் துறைகளின் வளர்ச்சி, புதிய நுகர்வு தேவைகளை ஏற்படுத்துவதோடு நுகர்வுச் சந்தைக்கு புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வரும் என்றனர்.
அதே வேளையில், ட்சொங்குவான்சுன் மன்றக் கூட்டத்தின் நிறைவு விழாவில் 21 முக்கிய அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகள் பொது மக்களுக்கு வெளியிடப்பட்டன.
யுனிஸ்கோ அமைப்பின் அதிகாரி ஹான்ஸ் டி’ஆர்வில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சீனாவில் பக்குவமடைந்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் கருவிகளும் உலக சந்தைக்கு வினியோகிக்கப்பட்டு, மக்களுக்கு மேலதிக தேர்வுகளைக் கொண்டு வந்துள்ளன சீன-ஸ்விட்சர்லாந்து வர்த்தக சம்மேளனத்தின் நிர்வாகச் செயலாளர் குயிலோம் ஜோயட் கூறுகையில்,
தானியக்க வழிமுறையில் உயர் தரமுள்ள பொருட்களை உற்பத்தி செய்வதில் ஸ்விட்சர்லாந்து அதிகமான மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம் உயர் தரமுள்ள,பசுமையான மயமாக்க வளர்ச்சி பாதையில் நுழைந்துள்ளது. இவ்விரு நாடுகள் சீராக ஒத்துழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றார்.
உயர் நிலை புத்தாக்க ஆற்றல் மற்றும் உற்பத்தி ஆற்றலில் சீனா சிறந்ததாக உள்ளது. வெளிநாட்டுத் திறப்பு என்பது புத்தாக்க வளர்ச்சிப் பாதைக்கான ஒரே ஒரு வழிமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
