டெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், 21 வயதான இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் ஷி யூக்கியை எதிர்கொண்ட ஆயுஷ், அவரை வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றினார்.
இதற்கு முன் ஷி யூக்கியுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் ஆயுஷ் தோல்வியையே சந்தித்திருந்தார்.
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஷியிடம் தோல்வியடைந்த ஆயுஷ், இந்த முறை சொந்த மண்ணில் தீவிர உத்தியுடன் களமிறங்கினார்.
“ஆகஸ்ட் 17 யூக்கிக்கு ஒரு கெட்ட நாளாக அமையும்” என்று பயிற்சியாளர் விமல்குமார் அளித்த ஊக்கத்தை மனதில் கொண்டு ஆயுஷ் சிறப்பாக விளையாடினார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: உலக நெ.1 வீரா் ஷி யூக்கியை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி அபார சாதனை
