விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: 60% இலவச இருக்கை ஒதுக்கீடு உத்தரவு நிறுத்திவைப்பு  

Estimated read time 1 min read

விமானப் பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கிய உத்தரவு, தற்போது அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீத இருக்கைகளை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயணிகள் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அந்த விதிமுறை, அமலுக்கு வந்த மூன்றே வாரங்களில் “மறு உத்தரவு வரும் வரை” நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் போன்ற விமான நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author