சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், சீன-ரஷிய உறவு, படிப்படியாக முன்னேறி, உண்மையான ஒத்துழைப்பின் சாதனைகளால் இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து வருகின்றது என்றார். பல ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், சீன-ரஷிய பொருட்காட்சி, இரு தரப்புகளின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை முன்னேற்றிய முக்கிய மேடையாகும்.
இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறையினர் இப்பொருட்காட்சியை வாய்ப்பாகக் கொண்டு, பரிமாற்றத்தை ஆழமாக்கி, வாய்ப்புகளைப் பகிர்ந்து, இரு நாட்டு பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். புதிய காலத்தில் இரு நாடுகளின் பன்முக நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டாளி உறவுக்குப் புதிய உயிராற்றல் ஊட்ட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இப்பொருட்காட்சி, மே 17ஆம் நாள் ஹய்லொங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் துவங்கியது.